Books






My Books

My Books
அரிதானதொரு வாழ்க்கை

அரிதானதொரு வாழ்க்கை

தங்களைப் பற்றிய கற்பிதங்களைப் பெண்கள் தொடர்ந்து உடைக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் அந்நிகழ்வுகளில் பெரும்பாலானவை வரலாற்று நூல்களில் காணாமல் போய்விடுகின்றன. திரைத்துறையும் விதிவிலக்கல்ல. அந்தப் போக்கு இந்த நூற்றாண்டில் மாறி வருகிறது. வரலாற்றில் சரியாகப் பதிவாகாமல் போன பல பெண் ஆளுமைகளை வெகுஜனங்களிடையே கொண்டு சேர்க்கின்றன தற்காலத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள். அப்பெண்களின் உண்மையான வாழ்க்கையையும், வரலாற்றையும் திரையில் அவை காட்சிப்படுத்தப்பட்ட விதத்தையும் அலசும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

My Books
Uru

உரு

ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும், தன் மொழியை அனைத்து விதமான நவீன பயன்பாட்டுச் சாதனங்களுக்குள்ளும் எடுத்துச் சென்று, அவற்றில் பொருந்தச்செய்வதையே தன் பணியாக மேற்கொள்வது அபூர்வம். அதைச் செய்துவரும் முத்து நெடுமாறன் கணித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவர். திறன்பேசித் தலைமுறைக்கும் தடையற்ற தமிழ் கிடைக்கக் காரணமாக இருந்தவர், இருப்பவர் முத்து நெடுமாறன். அவருடைய வாழ்க்கைக் கதையான இந்த நூல், கணினித்தமிழின் கதையும்தான்.

Buy Now
My Books
pazhi pagai pancham Bangladesh

பழி, பகை, பஞ்சம், பங்களாதேஷ்

பங்களாதேஷ் மக்களின் மத அடையாளம் மட்டுமே அவர்களைப் பாகிஸ்தானுடன் இணைத்து வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. வங்காள இனமாக இணைந்து போராடி விடுதலை பெற்ற பிறகும் சிக்கல் தீரவில்லை. மக்களாட்சிக்கான பங்களாதேஷிகளின் போராட்டத்தை, அவர்களின் கோணத்தை முதன்மையாக வைத்துப் பதிவு செய்கிறது இந்நூல்.

My Books
Uru

உலரா உதிரம்

இஸ்ரேல் பாலஸ்தீனச் சிக்கலுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதைச் சுருக்கமாகவும், 2023 அக்டோபரில் தொடங்கிய போரின் விளைவுகளை நெருங்கிப் பார்த்து விரிவாகவும் அலசுகிறது இந்நூல். இஸ்ரேல் என்கிற ஓர் அரசே எப்படி ஒரு தீவிரவாத இயக்கம் போலச் செயல்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

Buy Now
My Books
Oru manithan Orunagarm

ஒரு மனிதன் ஒரு நகரம்

எழுத்தர் பணிக்காக மதராஸ் வந்தவர் ராபர்ட் க்ளைவ். பிறகு போர் வீரராகி வெற்றிகளைக் குவித்தார். அவரது வெற்றிகளே இந்தியாவில் பிரிட்டிஷ் அரசினை நிறுவ அடித்தளமிட்டன. ராபர்ட் க்ளைவ் காலத்தில் ஆரம்பித்து எட்வர்ட் க்ளைவ் காலத்தில் ஏறக்குறைய தென்னிந்தியா முழுதும் ஆங்கிலேயர் வசமானது. இன்றைய சென்னை, கருக்கொண்டு உருக்கொண்டு, காலத்துக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு உருவாகி வளர்ந்த வரலாற்றை ராபர்ட் க்ளைவின் வாழ்வோடு இணைத்து விவரிக்கிறது இந்நூல்.

Buy Now
My Books
thadai athai uthai

தடை அதை உதை

சென்னையில் தெருவோரம் வசிக்கும் குடும்பங்களின் வாழ்க்கையைக் கள ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல். கால்பந்து விளையாட்டில் உள்ள ஆர்வத்தினாலும் திறமையினாலும் வெளிநாடு சென்று விளையாடும் வாய்ப்பு பெற்ற சாக்கர் சங்கீதாவின் கதையைப் பின்னணியாகக் கொண்டு கள நிலவரத்தை விரிவாக அலசுகிறது இந்நூல்.

My Books
Inayath thozilnutpam arivom

இணையத் தொழில்நுட்பம் அறிவோம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள், வலைத்தளங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியது இந்நூல். தொழில்நுட்ப வளர்ச்சியை பெண்ணிய நோக்கில் கவனித்து எழுதப்பட்டுள்ளது. எளிமையான தமிழில் பல விஷயங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தரும் கையேடு.

My Books
Thirukkural Kathaikal

திருக்குறள் கதைகள்

எக்காலத்துக்கும் பொருந்து அறக்கருத்துகளைக் கொண்டது திருக்குறள். சில திருக்குறள் கருத்துகள் இந்நூலில் கதைகளாக விளக்கப்படுகின்றன. பாலினச் சமத்துவம், பெண்ணியம், அறம், நற்குணங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் பிரசாரத் தொனியின்றி கதைப்போக்கில் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ள நூல்.

My Books
Ezuththu pirantha kathai

எழுத்து பிறந்த கதை

ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ஜஸ்ட் சோ ஸ்டோரிஸ் கதைகளில் உள்ள இரு கதைகளின் தமிழ் வடிவம் இந்நூல். எழுத்து பிறந்த கதையும் முதல் கடிதம் எழுதப்பட்ட கதையும் சுவாரஸ்யமாக இந்நூலில் புனைவாக எழுதப்பட்டுள்ளன.

My Books
tharaiya oongi mithitha pattampoochi

தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி

ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ஜஸ்ட் சோ ஸ்டோரிஸ் கதைகளில் உள்ள பத்து கதைகளின் தமிழ் வடிவம் இந்நூல். விலங்குகளின் இயல்பான குணங்களுக்குப் புனைவாக காரணங்களைப் புனைந்து எழுதப்பட்ட நூல். சிறுவர்கள் தூங்கும் நேரத்தில் சொல்லப்படும் பெட் டைம் ஸ்டோரிஸ் வகையைச் சார்ந்த கதைகள்.