• தமிழ்ச்சொல்: பேஸ்புக் குறிப்புகள்

    நீண்ட நாள்களுக்கு ஒன்றில் உற்சாகத்தைத் தக்கவைப்பது எனக்குச் சவாலான ஒன்றாயிருக்கிறது. சென்னையிலிருந்து கிளம்பி செங்கல்பட்டு தாண்டியதுமே கொடைக்கானல் எப்போ வரும் எனக் கேட்கும் குழந்தை போலாகிவிடுகிறேன். கடந்தாண்டு நூறு நாள்களுக்கு தமிழ்சொல்லும் பொருளும் எழுதிக்கொண்டிருந்ததை பேஸ்புக் நினைவூட்டியது. அதைப் பார்த்ததுமே மீண்டும் அப்படிச் செய்யலாமா எனத் தோன்றியது. அகராதியைத் திறந்து ஏதோ ஒரு பக்கத்தில் தெரியும் சொற்களில் ஒன்றை எழுதியதால் நான் அறிந்திராத பல சொற்களைக் கற்றுக்கொண்டேன். நல்லனுபவம் அது.  இப்போதும் என் மேசையில் அகராதி இருக்கிறது.…

    ,
  • நினைவுகளின் கண்காட்சி 

    கண்காட்சியின் வாயிலில் இருந்தே ‘நான் சின்ன வயசுல இருந்தப்ப…’ என ஆரம்பித்துவிட்டனர் பெற்றோர். நுழைவாயிலின் ஒரு பக்கம் பழைய தொலைக்காட்சி, வானொலிப் பெட்டிகளும் மறுபக்கம் டால்டா டின், மைலோ டப்பாக்களும் அடுக்கியிருந்தன. சிறுவர்கள், தங்கள் பெற்றோரின் குழந்தைப் பருவத்துக்குள் நுழையும் வாயில் அது. பெரியவர்களோ குழந்தைகளாகவே மாறியிருந்தனர். ‘இந்த ஹார்லிக்ஸ் டப்பா பக்கத்துல நான் நிக்கிற மாதிரி ஒரு படம் எடுத்துக்குடு’ என ஆங்காங்கே நின்று படமெடுத்துத் தங்கள் திறன்பேசிகளில் நினைவுகளைச் சேகரித்துக்கொண்டிருந்தனர்.  எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஜூன்…

  • உரிமைத் தொகையும் உரிமையும்

    நீளமான நிபந்தனைப் பட்டியலைப் படித்துவிட்டேன் என ஒப்புக்கொள்வதுதான் தற்கால மனிதர்கள் சொல்லும் பொய்களில் முதன்மையானது. முன்னொரு காலத்தில் தேர்தல் அறிக்கைகளும் நிபந்தனைப் பட்டியல் போன்று யாரும் படிக்காத ஒன்றாகவே இருந்தன. கலர் டிவியை இலவசமாக அறிவித்த தேர்தலுக்குப் பிறகு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாகிவிட்டன தேர்தல் வாக்குறுதி அறிக்கைகள். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல. இவற்றில் இருக்கும் முக்கியமான ஒற்றுமை பெண்கள் முன்னேற்றம். வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டது ஊழல் என வழக்கு…

    ,
  • எண்ணியாங்கு எய்துப

    பதிமூன்று நாள்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்து வெற்றிகரமாக இந்த ஆண்டை நிறைவு செய்தேன். நான் எழுதுவதற்கென்றே என் வீட்டில் ஓர் அறையை அபகரித்துள்ளேன். மினிமலிசக் கொள்கையோடு திட்டமிட்ட ஆண்டு என்பதால் வெற்றிப் பட்டியல் நீளம் குறைவுதான், ஆனால் நிறைவானது.  இரண்டு புனைவற்ற புத்தகங்கள் எழுதுவது. நாவல், குறுநாவல், நெடுங்கதை என ஏதோ ஒரு புனைவு எழுத முயற்சி செய்வது. இவைதாம் என் இலக்குகளாக இருந்தன. மெட்ராஸ் பேப்பர் துணை ஆசிரியராகக் கணிசமான நேரம் செலவிடுகையில் நிறைய…

  • சிறப்பாக எழுதுவது எப்படி?

    முடிக்கவேண்டிய வேலைகள் வரிசையில் இருக்கும்போது கூச்சமே படாமல் புதிதாக ஒன்றை இழுத்து வந்து இடையில் நுழைப்பது என் குணம். இன்றைக்கு காலையில் முத்து நெடுமாறன் பகிர்ந்திருந்த பேஸ்புக் பதிவைப் பார்த்ததும் அதைத் தமிழில் எழுத முயற்சி செய்யலாம் எனத் தோன்றியது. வழக்கமான வேலைகளுக்கு நடுவில் இடைவெளி எடுக்கும்போதெல்லாம் ஒவ்வொரு வரியாக எழுதினேன். ஆங்கிலப் பதிவில் இருந்த நகைமுரண் பகடியைத் தக்கவைக்க முயன்றுள்ளேன். சிறப்பாக எழுதுவது எப்படி? 1) மோனை மிகுந்து மொக்கையாக எழுதாதீர். 2) இடைச்சொற்கள் வரக்கூடாது…

  • நிகரற்ற வெற்றி

    பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி. வாழ்த்துகள்.  வெற்றிக் கொண்டாட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி உள்ளிட்ட பலரையும் காணமுடிந்தது. உலகக் கோப்பையைக் கையில் வாங்கித் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்த மித்தாலி, பேச முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருந்தார். நன்றி என்பதைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை. மற்ற சீனியர் வீரர்களுமே உணர்ச்சிகரமான மனநிலையில்தான் இருந்தனர். உண்மையில் நன்றிக்கு உரியவர்கள் அவர்கள் அனைவரும்தாம். மித்தாலி ராஜ் கேப்டனாக…

  • ரணகளமாக்கும் ரசிக மனநிலை

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு முழக்கம் தேசியளவில் கவனம் ஈர்த்தபோதுதான் கரூர் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்தன. நெரிசல் மேலாண்மையைவிட அதிகம் விவாதிக்கப்பட்டது தற்குறி மனநிலை. உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்க “செமயா இருந்திச்சி” என நால்வர் மயங்கி விழுந்து தங்கச் சங்கிலியும் வெள்ளி மெட்டியும் பறிபோனதை விவரிக்கும் இளைஞர்களைப் பார்த்து மனம் நொந்தது அறிவுச்சமூகம். வரலாறும் அறிவியலும் இது ஒன்றும் புதிதல்ல என்கின்றன. கலை, பரப்புரைக் கருவியாக இருப்பதை வரலாற்றின் எல்லாப்பக்கங்களிலும் காணலாம். இந்திய விடுதலைக்கு முன்பும் அதற்குப் பிறகும்…

  • அகரம் யாருடைய வெற்றி?

    அகரம் விதைத் திட்டம் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். நடிகர் சூர்யா ஒருநாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது படிக்காமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து, வகையறா பதிவுகள் பேஸ்புக்கில் வலம் வருகின்றன. அகரம் பவுன்டேஷன் வழியாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி மும்பை, லண்டன், சென்னை ஈசிஆர் எனப் பல இடங்களில் சொத்து வாங்கும் சூர்யா வகைப் பதிவுகள் வாட்சாப்பில் சுற்றுகின்றன. இந்த இரு எல்லைக்கும் நடுவே,…

  • ‘பேட்டர்ன்’ மாறுமா?

    2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பங்களாதேஷில் தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது. தேதியை இரண்டு மாதம் முன்னர் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பங்களாதேஷ் உருவாகவும் அதன் பிறகும் எத்தனையோ புரட்சிகள் அந்நாட்டில் நடந்தன. பல ஆட்சிகள் கவிழ்ந்தன. தேர்தல்களும் நடந்தன. ஆனால் ஷேக் ஹஸினா ஆட்சி கவிழ்ந்த பிறகு நடக்கும் இத்தேர்தலில் தலைகீழ் மாற்றம் ஒன்று இருக்கிறது. பங்களாதேஷ் தனி நாடாகப் போராடிய அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டிருக்க, அதற்கு எதிராக இருந்த ஜமாத் இ இஸ்லாமி,…

  • செத்த பொருளாதாரமும் சாகாத நட்பும்

    மாறிக்கொண்டே இருக்கும் உலக அரசியல் அரங்கில் மாறாத ஒன்று இந்திய ரஷ்ய நட்பு. இதைச் சொன்னது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 2023 டிசம்பர் மாதத்தில் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இப்படிப் பேசினார். டிரம்ப் போட்ட சமூகவலைத்தளப் பதிவு அந்த உறவை அசைத்துவிடுமா என்ன? 15ஆம் நூற்றாண்டு, 19ஆம் நூற்றாண்டு கதைகளுக்குப் போகவேண்டாம். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து பார்த்தாலும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு வலுவாக இருக்கிறது என்பது உண்மைதான். இந்தியா, பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு…