Category: ஆண்டறிக்கை
-
எண்ணியாங்கு எய்துப
பதிமூன்று நாள்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்து வெற்றிகரமாக இந்த ஆண்டை நிறைவு செய்தேன். நான் எழுதுவதற்கென்றே என் வீட்டில் ஓர் அறையை அபகரித்துள்ளேன். மினிமலிசக் கொள்கையோடு திட்டமிட்ட ஆண்டு என்பதால் வெற்றிப் பட்டியல் நீளம் குறைவுதான், ஆனால் நிறைவானது. இரண்டு புனைவற்ற புத்தகங்கள் எழுதுவது. நாவல், குறுநாவல், நெடுங்கதை என ஏதோ ஒரு புனைவு எழுத முயற்சி செய்வது. இவைதாம் என் இலக்குகளாக இருந்தன. மெட்ராஸ் பேப்பர் துணை ஆசிரியராகக் கணிசமான நேரம் செலவிடுகையில் நிறைய…
-
அடுத்த இலக்கு, அதிகத் திட்டு
நடுவில் சிலகாலம் குடும்பஸ்தனாக மாறிய நண்பர் பாண்டியராஜன் திருந்த முயற்சி எடுத்தபோது உதவினேன். குத்துவிளக்காக இருந்த காயத்ரியை, உன் கனவுதான் முக்கியம், குடும்பம் குழந்தை குட்டி எல்லாம் அடுத்தது என்று குழப்பிவிட்டேன். இந்த சமூக சேவை கொடுத்த திருப்தி மட்டுமின்றி, எழுத்தொழுக்கத்தின் முதல் படியில் ஏறியதால் நான் அடைந்த பலன்களை அனுபவித்து மகிழ்ந்த ஆண்டு இது. எழுதுவது மட்டுமே எழுத்தாளரின் பணி என்பது கடந்தகாலம். அதை வாசகரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் எழுத்தாளருக்கே என்பது தற்போதைய புதிய…
-
எழுத்தொழுக்கத்தின் முதல் படி
நான் எழுதத் தொடங்கிய முதல் ஆண்டின் அனுபவங்கள் மெட்ராஸ் பேப்பரில் கட்டுரையாக வந்தது. 2022ஆம் ஆண்டு இறுதியில் எங்கள் ஆசிரியர் பா.ராகவன் நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது குறிப்பிட்ட நோக்கம் ஏதுமில்லை. ஆர்வம் இருந்தது. அந்தப் பயிற்சியில் ஆர்வம் கூடி அடுத்த வாரம் ஹெர் ஸ்டோரிஸ் நடத்திய பயிற்சிப் பட்டறையிலும் கலந்து கொண்டேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வர எழுதுவது தொடர்ந்தது. 2023 டிசம்பரில் மெட்ராஸ்பேப்பரில் எழுதிய ஆண்டறிக்கைக் கட்டுரையைக் கீழே கொடுத்துள்ளேன். * இந்த…
