Category: கதை
-
கூட்டம்
குளிருக்கு இதமான கதகதப்பு. டீக்கடையில் செய்தித்தாள் வாங்கி, நின்றபடியே படித்துக் கொண்டிருக்கும் அம்மாவின் காலை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொள்கிறேன். நான் அணிந்து கொண்டிருந்த ஸ்கர்ட்டில் இருந்து பிங்க் நட்சத்திரங்கள் பறக்கின்றன. செய்தித்தாளுக்கான பணத்தை டீக்கடைப் பெண்ணிடம் நீட்டுகிறாள் அம்மா. அந்தப் பெண்ணின் நெற்றியில் இருக்கும் பெரிய பொட்டில் பாய்கிறது துப்பாக்கித் தோட்டா ஒன்று. சரிந்து கீழே விழுந்தாள் அவள். இல்லை விழுந்தது அம்மா. என் மீது விழுந்து கிடக்கிறாள். மூச்சு முட்டுகிறது. அம்மாவின் கதகதப்பு சுட்டெரிக்கும் சூடாகிறது.…
-
பிரண்டைத் துவையல்
பேச்சின் வேகத்தை ஒட்டிக் காயத்ரி, கார் ஓட்டும் வேகமும் கூடுவது போல இருந்தது பிரபுவுக்கு. செங்கல்பட்டிலிருந்து பிரியும் சாலையில் திரும்பிக் காப்புக் காடு வழியாக மேடவாக்கம் சென்று கொண்டிருந்தனர். வழியில், திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவுக்காகச் சில கிலோ மீட்டர்கள் சாலையெங்கும் டியூப் லைட் கட்டி வழக்கம் போலன்றி, வெளிச்சமாக இருந்தது. தூரம் அதிகம், காட்டு வழி என்றாலும் சுங்கச்சாவடியும் நெரிசலும் தவிர்க்க எப்போதும் வரும் பாதைதான். ஆனால் ஏதேனும் சிக்கல் என்றால் உதவிக்கு வண்டி வரக்கூட…
