Tag: இந்தித் திணிப்பு
-
மொழி அரசியல்
இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளைப் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். பேச்சு வேகத்தில் தெரியாமல் வந்த சொற்கள் அல்ல. ஒருமுறை சொன்னதோடு நிறுத்தாமல் மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார். எதிர்ப்பு எழுந்தபிறகு, தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். மன்னிப்பு கேட்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருந்தது தமிழ்நாடு அரசு என்கிறார் தர்மேந்திர பிரதான். ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசி முடிவெடுக்கலாம் என முன்வருவதே புரிந்துணர்வு ஒப்பந்தம். அதில் கையெழுத்திடுவதால்…
