Tag: காஷ்மீர்
-
இமயமலையில் தண்ணீர் இல்லை
ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திடீரென நீர் நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை காஷ்மீர். பத்தாண்டுகளாகவே சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மழையும் பனிப்பொழிவும் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகின்றன. இந்த ஆண்டு குளிர்காலத்தில் எண்பது சதவிகிதம் மழை குறைந்துள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி…
