Category: மற்றவை
-
தமிழ் பிழைக்கட்டும்
பிழையின்றி எழுதுவதில் கவனம் குவித்தால் இலக்கியம் படைக்க முடியாதெனும் நம்பிக்கை தமிழ்ச்சூழலில் உண்டு. இலக்கியம் படைக்காதவர்கள் மட்டுமாவது பிழையின்றி எழுத முயலலாம். இன்றைய சூழலில் தமிழில் பிழையின்றி எழுதுவது எளிதானதுதான். எனக்குத் தெரிந்த இரண்டு வழிகளை இங்கே குறிப்பிடுகிறேன். ஒன்று என்னைப் போன்றவர்களுக்கானது. மற்றொன்று நான் என் பணி அனுபவத்தில் அதிகம் எதிர்கொள்பவர்களுக்கானது. நாம் எந்த நிலையில் இருக்கிறோம், நம் தேவை என்ன என்பதைப் பொறுத்தே தீர்வுகளைத் தேடவேண்டும். நூறு விழுக்காடு பிழையே இன்றி எழுதும் நபரல்ல…
-
தமிழ்ச்சொல்: பேஸ்புக் குறிப்புகள்
நீண்ட நாள்களுக்கு ஒன்றில் உற்சாகத்தைத் தக்கவைப்பது எனக்குச் சவாலான ஒன்றாயிருக்கிறது. சென்னையிலிருந்து கிளம்பி செங்கல்பட்டு தாண்டியதுமே கொடைக்கானல் எப்போ வரும் எனக் கேட்கும் குழந்தை போலாகிவிடுகிறேன். கடந்தாண்டு நூறு நாள்களுக்கு தமிழ்சொல்லும் பொருளும் எழுதிக்கொண்டிருந்ததை பேஸ்புக் நினைவூட்டியது. அதைப் பார்த்ததுமே மீண்டும் அப்படிச் செய்யலாமா எனத் தோன்றியது. அகராதியைத் திறந்து ஏதோ ஒரு பக்கத்தில் தெரியும் சொற்களில் ஒன்றை எழுதியதால் நான் அறிந்திராத பல சொற்களைக் கற்றுக்கொண்டேன். நல்லனுபவம் அது. இப்போதும் என் மேசையில் அகராதி இருக்கிறது.…
