Tag: தமிழ் சொல்
-
தமிழ்ச்சொல்: பேஸ்புக் குறிப்புகள்
நீண்ட நாள்களுக்கு ஒன்றில் உற்சாகத்தைத் தக்கவைப்பது எனக்குச் சவாலான ஒன்றாயிருக்கிறது. சென்னையிலிருந்து கிளம்பி செங்கல்பட்டு தாண்டியதுமே கொடைக்கானல் எப்போ வரும் எனக் கேட்கும் குழந்தை போலாகிவிடுகிறேன். கடந்தாண்டு நூறு நாள்களுக்கு தமிழ்சொல்லும் பொருளும் எழுதிக்கொண்டிருந்ததை பேஸ்புக் நினைவூட்டியது. அதைப் பார்த்ததுமே மீண்டும் அப்படிச் செய்யலாமா எனத் தோன்றியது. அகராதியைத் திறந்து ஏதோ ஒரு பக்கத்தில் தெரியும் சொற்களில் ஒன்றை எழுதியதால் நான் அறிந்திராத பல சொற்களைக் கற்றுக்கொண்டேன். நல்லனுபவம் அது. இப்போதும் என் மேசையில் அகராதி இருக்கிறது.…
