-
அது வேறு வர்க்கம்
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல தங்கள் நாட்டுக்கும் நல்லது எனப் பல நாட்டு மக்கள் நினைக்கின்றனர். முக்கியமாக, பெரும்பான்மை இந்திய மக்களின் கருத்து அதுதானாம். சவுதி அரேபிய, ரஷ்ய நாட்டுப் பிரஜைகளும் இப்படியொரு நம்பிக்கையிலிருக்கிறார்கள் என்கிறது கருத்துக் கணிப்பு. பாம்பு பால் குடிப்பதாகக் கூடத்தான் மக்கள் நம்புகிறார்கள். அதுவல்ல விஷயம். டிரம்ப், அமெரிக்க நாட்டுக்கு மட்டும்தான் அதிபர் என்றாலும் அவர் எடுக்கும் முடிவுகள் உலக நாடுகள்…
-
பொய்களுக்குத் தயாராகுங்கள்
தங்கள் தளத்தில் பதிவிடுபவை உண்மைதானா எனச் சரிபார்ப்பதைக் கைவிடுகிறது மெட்டா. இனிமேல் உண்மையோ பொய்யோ எதை வேண்டுமானாலும் பதிவிட பேஸ்புக், திரெட்ஸ் உள்ளிட்ட தளங்களைத் தாராளமாகத் திறந்துவிடுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்று இதற்குச் சிலர் பெயர் வைத்திருக்கிறார்கள். மெட்டா தலைவர் மார்க் சக்கர்பெர்க் வெளியிட்ட வீடியோ செய்திக் குறிப்பொன்றில் இம்முடிவைப் பற்றி விளக்கமாகப் பேசியுள்ளார். தங்கள் தளங்களில் பதிவிடப்படும் விஷயங்கள் தணிக்கை செய்யப்படுவதும் பேஸ்புக் சிறையில் வைக்கப்படுவதும் இனிமேல் குறையும் என்கிறார் மார்க். ஆனால், உண்மையா எனச்…
-
அடுத்த இலக்கு, அதிகத் திட்டு
நடுவில் சிலகாலம் குடும்பஸ்தனாக மாறிய நண்பர் பாண்டியராஜன் திருந்த முயற்சி எடுத்தபோது உதவினேன். குத்துவிளக்காக இருந்த காயத்ரியை, உன் கனவுதான் முக்கியம், குடும்பம் குழந்தை குட்டி எல்லாம் அடுத்தது என்று குழப்பிவிட்டேன். இந்த சமூக சேவை கொடுத்த திருப்தி மட்டுமின்றி, எழுத்தொழுக்கத்தின் முதல் படியில் ஏறியதால் நான் அடைந்த பலன்களை அனுபவித்து மகிழ்ந்த ஆண்டு இது. எழுதுவது மட்டுமே எழுத்தாளரின் பணி என்பது கடந்தகாலம். அதை வாசகரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் எழுத்தாளருக்கே என்பது தற்போதைய புதிய…
-
எழுத்தொழுக்கத்தின் முதல் படி
நான் எழுதத் தொடங்கிய முதல் ஆண்டின் அனுபவங்கள் மெட்ராஸ் பேப்பரில் கட்டுரையாக வந்தது. 2022ஆம் ஆண்டு இறுதியில் எங்கள் ஆசிரியர் பா.ராகவன் நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது குறிப்பிட்ட நோக்கம் ஏதுமில்லை. ஆர்வம் இருந்தது. அந்தப் பயிற்சியில் ஆர்வம் கூடி அடுத்த வாரம் ஹெர் ஸ்டோரிஸ் நடத்திய பயிற்சிப் பட்டறையிலும் கலந்து கொண்டேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வர எழுதுவது தொடர்ந்தது. 2023 டிசம்பரில் மெட்ராஸ்பேப்பரில் எழுதிய ஆண்டறிக்கைக் கட்டுரையைக் கீழே கொடுத்துள்ளேன். * இந்த…
-
பிரண்டைத் துவையல்
பேச்சின் வேகத்தை ஒட்டிக் காயத்ரி, கார் ஓட்டும் வேகமும் கூடுவது போல இருந்தது பிரபுவுக்கு. செங்கல்பட்டிலிருந்து பிரியும் சாலையில் திரும்பிக் காப்புக் காடு வழியாக மேடவாக்கம் சென்று கொண்டிருந்தனர். வழியில், திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவுக்காகச் சில கிலோ மீட்டர்கள் சாலையெங்கும் டியூப் லைட் கட்டி வழக்கம் போலன்றி, வெளிச்சமாக இருந்தது. தூரம் அதிகம், காட்டு வழி என்றாலும் சுங்கச்சாவடியும் நெரிசலும் தவிர்க்க எப்போதும் வரும் பாதைதான். ஆனால் ஏதேனும் சிக்கல் என்றால் உதவிக்கு வண்டி வரக்கூட…
-
வன்முறைக்குச் சட்டப்பாதுகாப்பு
(அக்டோபர் 10, 2024 அன்று ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் வெளியான கட்டுரை) கணவன் மனைவியிடம் வல்லுறவு கொண்டால் தண்டம் விதித்தால் போதும், தண்டனை வேண்டாம் என்கிறது இந்திய அரசு. திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவை, குற்றவியல் சட்டத்தின்படி அணுகுவது ‘அதிகப்படியான கடுமை (excessively harsh) எனத் தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. கணவன் மனைவியை வன்புணர்தல் கடுமையானதல்ல, அதைக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரித்தல் கடுமையானது என்கிற நிலைப்பாடு பிற்போக்குத்தனமானது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 36 நாடுகள்…
-
பெண் உடல் கணவனுக்குச் சொந்தமா?
(செப்டம்பர் 18, 2024 அன்று ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் வெளியான கட்டுரை) கற்பனைக்கெட்டா கொடூரம். ஒரு வரி தலைப்புச் செய்தியைப் படிக்கும் போதே வாந்தியெடுக்கத் தோன்றும் அருவருப்பு. எந்த மாதிரியான உலகில் வாழ்கிறோம் என்கிற மன உளைச்சல். இத்தனையும் மீறி இச்செய்தியை எழுத ஜிஸெல் என்கிற பெண்மணியின் உறுதியே காரணம். தன் கணவனும் அவன் துணையுடன் எழுபதுக்கும் மேற்பட்டோரும், தன்னை வன்புணர்ந்த குற்றத்துக்கு நீதி கேட்கிறார் இந்த 72 வயதுப் பெண்மணி. பிரான்ஸ் நாட்டுச் சிற்றூர் ஒன்றில், பெண்களின்…
-
பொருளாதார வலிமை, பெண்களின் உரிமை
(ஜூலை 13, 2024 அன்று ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் வெளியான கட்டுரை) இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125இன் கீழ், ‘இஸ்லாமியப் பெண் ஒருவர் தன் கணவரிடம் இருந்து பராமரிப்புத் தொகை பெறலாம்’ என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. விவாகரத்து வழக்குகளில் கணவனிடம் இருந்து மனைவி பராமரிப்புத் தொகை பெறுவது ஏன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பேசப்படுகிறது? அதற்குப் பின்னால் இருக்கும் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இத்தீர்ப்பின் முக்கியத்துவம் விளங்கும். மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்தவர் ஷா…
-
சொல்லப்படாத கதைகள் – ஜென்னி எர்பென்பெக்
(மே 30, 2024 அன்று ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள்) மைக்கேல் ஹாஃப்மேன் மொழிபெயர்த்த ஜென்னி எர்பென்பெக்கின் கைரோஸ் நாவல், 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளது. ஜென்னி எர்பென்பெக் (Jenny Erpenbeck) பிறந்து வளர்ந்தது கிழக்கு ஜெர்மனியில். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பெர்லின் சுவருக்கு அருகில் நான்காவது மாடியில் இருந்தது இவர் வீடு. சுவர் இடிப்பு ஆரம்பித்த நேரத்தில் ஒயின் அருந்தித் தன் தோழியருடன் பேசிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்தால் சுவரும் கிழக்கு…
-
இன்று பில்கிஸ், நாளை நீங்களோ நானோ?
(பிப்ரவரி 10, 2024 அன்று ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் வெளியான கட்டுரை) பில்கிஸ் பனோ வழக்கில் நீதிபதி பிவி.நாகரத்னா, நீதிபதி உஜ்ஜல் புயான் இருவரின் டிவிஷன் பெஞ்ச் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் எத்தனை முறை இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க காத்திரமான கருத்துகளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதை அறிந்தால் இத்தீர்ப்பினால் பைசாப் பிரயோஜனம் இருக்கிறதா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. பில்கிஸ் பனோவைப் போல ஆயிரக்கணக்கான பெண்கள் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டனர். குற்றம் புரிந்தவர்கள்…
