-
நாளும் தொடரும் நாய்ப் பிரச்னை
தடுப்பூசி மருந்து மாஃபியாக்களின் வேலை, நாய்களிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வைரஸ் பரவல் இருக்கிறது, வழக்கத்தைவிட மூர்க்கமாகக் கடிக்கும்படி யாரோ எதையோ கொடுத்து நாய்களை மாற்றிவிட்டார்கள்- இவையெல்லாம் சமீபத்திய நாய்க்கடிச் செய்திகளால் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருக்கும் கான்ஸ்பிரசி தியரிகளில் சில. நாய்கள் தொந்தரவு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகவே பிரச்சனைதான். 1770ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னையில் நடந்த நிர்வாகக் கூட்டத்தில் கோட்டைக்குள் வந்து தொந்தரவு செய்யும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கென நியமிக்கப்பட்ட நபரிடம்…
-
பெண்கள் பேசவேண்டும்
(ஜூலை 21, 2023 அன்று ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் வெளியான கட்டுரை ) இரண்டு கொலைகள். பாலியல் வன்புணர்வு. பெண்களின் ஆடைகளைக் களைந்து ஊர்வலம். வைரல் வீடியோவுக்குப் பின் இருக்கும் இந்தச் சம்பவங்கள் நடந்தது மே 4ஆம் தேதி. நியூஸ்க்ளிக் இது பற்றி ஜூன் 1ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதே நாளில் இரு பெண்களை அறைக்குள் வைத்து பல மணிநேரம் வன்புணர்ந்து கொன்ற சம்பவத்தையும், மேலும் இதுபோல பல சம்பவங்களையும் விளக்கமாகப் பட்டியலிட்டுள்ளது இந்தத் தளம். தி…
-
பொதுமைப்படுத்துதல் சரியா?
(மே 4, 2023 அன்று ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் வெளியான கட்டுரை) ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் என்றொரு புத்தகம் இருக்கிறது. ஆண்களும் பெண்களும் அடிப்படையிலேயே எப்படி வெவ்வேறாகச் சிந்திக்கிறார்கள் என்று விளக்கும் அந்தப் புத்தகம். ஆண்கள் புள்ளிவிவரங்கள், உண்மைகள் அடிப்படையில் அனைத்தையும் அணுகுகிறார்கள். பெண்கள் உணர்வின் அடிப்படையில் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள் என்பது மொத்த புத்தகத்தின் கருத்து. ‘இங்கே வா’ என்பதை ‘இதர் ஆவோ’ என இந்தியில் சொல்வதென்றால் ‘அங்கே போ’ என்பதை எப்படிச் சொல்வது…
-
ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்
பொழுது நள்ளிரவைத் தாண்டி இருந்தது. கடற்கரை ஓரத்தில் அச்சத்துடன் காத்திருந்தது அனிதாவின் குடும்பம். அவளுக்கு வயது அப்போது ஏழு. உடன், அண்ணனும் அக்காவும், தம்பியும், தங்கையும் இருந்தார்கள். அனிதாவின் அம்மாவுக்கு தம் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளைப் போல இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அனிதாவின் மாமா, இயக்கத் தொடர்பு இருக்கலாம் என்று இலங்கை ராணுவத்தால் சந்தேகிக்கப்பட்டவர். இவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தவர். அவர், கையில் குண்டுக் காயத்துடன் வீடு திரும்பிய நாளில்தான் அனிதாவின் அம்மா குழந்தைகளின்…
-
ஓயாத மீ டூ அலைகள்
எழுத்தாளர் கோணங்கி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கார்த்திக் என்பவர் தெரிவித்ததில் இருந்து தமிழகத்தில் மீ டூ இயக்கத்தின் அடுத்த அலை ஆரம்பமானது. அமெரிக்காவில், டாரனாபர்க் 2006-ல் மீடூ என்ற வார்த்தையைப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிய விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தினார். பாலினச் சமத்துவச் செயற்பாட்டாளர் இவர். 2017-ல் இந்த வார்த்தை பாலியல் முறைகேடுகளுக்கான குறியீடாக ஹாஷ்டேக் வடிவில் மறு அவதாரம் எடுத்தது. தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டைனால் திரைத்துறையில் 30 ஆண்டுகளில் வன்புணர்வு, பாலியல் முறைகேடுகள்,…
-
நாடும் ஒரு நாட்டியப் பேரொளியும்
கடந்த வாரம் வந்து சென்ற சிவராத்திரிக்குப் பத்து நாள் முன்னும் பின்னுமாக நாம் யாரைக் குறித்து அதிகம் பேசினோம் என்று சிந்தித்துப் பார்த்தால், விடை ஜக்கி வாசுதேவாக இருக்கும். நம்மால் மாற்ற இயலாத, ஏற்கவும் முடியாதவற்றை நகைத்துக் கடக்க இந்நாள்களில் பழகிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நமது நகைப்போ, நிராகரிப்போ நெருங்கவே முடியாத உயரத்தில் அவர் தமது சமஸ்தானத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். எப்படி முடிந்தது? வெறும் பேச்சு. என்ன சொல்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். இதுதான் அவர்களின்…
-
அதானி: மூன்றாம் இடத்தில் இருந்து முட்டுச் சந்துக்கு
புதன்கிழமை இரவு. மும்பை தாஜ் ஹோட்டல். அதானி வழக்கமாகச் செல்லும் வெதர் க்ராப்ட் ஐந்து நட்சத்திர உணவகம். துபாய்த் துறைமுகத் தலைமை அதிகாரியுடன் வேலை தொடர்பான சந்திப்பு இருந்தது அதானிக்கு. இரவு உணவும், அலுவல் சந்திப்பும் முடிந்தவுடன் பணம் செலுத்திவிட்டுக் கிளம்பினார் அதானி. நண்பர்கள் சற்று நேரம் இருக்கலாம் எனச் சொன்னார்கள். அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். கீழே தரைத்தளத்தில் துப்பாக்கிச் சத்தம். 26/11 தீவிரவாதத் தாக்குதல் அது. இரவு உணவுக்குப் பின் தாமதிக்காமல் கீழே சென்றிருந்தால்…
-
கிரிப்டோ ராணியின் மோசடி சாம்ராஜ்யம்
அமெரிக்க எஃப்.பி.ஐ.யின் தேடப்படுபவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருப்பவர் ருஜா இக்னடாவா. இந்தப் பட்டியலில் தற்போது இருக்கும் ஒரே பெண் இவர் மட்டும்தான். இவரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் கிடைக்கும் பரிசுத் தொகை எண்பது லட்சத்துக்கு மேல். அப்படி என்ன செய்தார் ருஜா? நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டாளர்களிடம் இருந்து ஏமாற்றியிருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் முப்பத்தாராயிரம் கோடி ரூபாய். இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப் பெரிய பண மோசடியாக இருக்கக்கூடும் இது. 1980-ல் பல்கோியாவில்…
-
உலகம் முழுதும் நம்மைப் பேசும்
நாற்பத்தி ஆறாவது சென்னை புத்தகக் காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த முறை சர்வதேசப் புத்தகச் சந்தையும் நடந்தது. இதை நடத்தியது தமிழ்நாடு அரசு. வழக்கமாக நடக்கும் புத்தகக்காட்சி, பதிப்பாளர்கள் கொண்டு வரும் புத்தகங்களை மக்கள் கண்டு, தேர்ந்தெடுத்து வாங்குவதற்கானது. தமிழ்நாடு அரசின் இந்த சர்வதேசப் புத்தகச் சந்தை தமிழ் பதிப்பாளர்களும் பன்னாட்டுப் பதிப்பாளர்களும் தங்கள் புத்தகங்களை மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்க விற்க களம் அமைத்துத் தருகிறது. ஒரே இடத்தில்தான் என்றாலும் தனியாக அமைக்கப்பட்டுள்ள இந்த…
-
பொங்குக!
அறுவடை நாள் கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பண்டிகைதான். உலகெங்கிலும் எப்படி எப்போது இந்நாளைக் கொண்டாடுகிறார்கள் எனத் தெரிந்துகொள்வோம். பிப்ரவரி மாதத்தில் திராட்சைப் பழங்களை ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடும் விழாவாக அறுவடையைக் கொண்டாடுகிறது அர்ஜென்டைனா. அழகிப்போட்டியும் உண்டு. வீதி முழக்க மக்கள் குவிந்து திராட்சைப் பழத்தில் குளித்து மகிழும் இந்த விழா ஸ்பெயின் நாட்டிலும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. ஸ்பெயினின் புனோல் நகரத்தில் தக்காளியை வீசிக் கொண்டாடும் ல டொமாட்டினா விழாவும் மிகப்…
