-
இனிமே இப்படித்தான்
அதிமுக தன்னுடைய தேர்தல் வியூகத்துக்கு உதவ ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரமன்யா கன்சல்டன்சியை நியமித்துள்ளது. கட்சிக்கூட்டணிக்கு முன்பு தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனங்களுடன் கூட்டு வைப்பதுதான் முதல்படி என்றாகிவிட்ட காலம் இது. திமுக, ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல் வியூக நிறுவனங்களுடன் கைகோத்துள்ளது. கேட்டவுடன் பிடித்துப்போகும் கேட்ச்சியான வாசகங்களுடன் தமிழ்நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. அனைத்தின் பின்னணியிலும் ஒரு நிறுவனம் இருக்கிறது. இந்திய அரசியலின் அண்மைக்கால வரவு இந்தத் தேர்தல் வியூக வடிவமைப்பு நிறுவனங்கள். கால்…
-
முடிக்க விரும்பாத போர்
இஸ்தான்புல்லில் கூடிய ரஷ்யா உக்ரைன் பிரதிநிதிகள் தலா ஆயிரம் வீரர்களை விடுவித்து அனுப்ப ஒப்பந்தம் செய்துள்ளனர். இறந்து போன ஆறாயிரம் வீரர்களின் எச்ச மிச்சங்களும் நாடு திரும்பும். நாநூறு உக்ரைன் குழந்தைகள் கடத்தப்பட்டதாகச் சொன்னதே உக்ரைன், அவர்களில் பத்து குழந்தைகள் திரும்ப வருகிறார்களாம். போர் நிறுத்தம்? அதெல்லாம் பட்டியலிலேயே இல்லை. சுமார் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வருவதை அறிவோம். முதலாம் ஆண்டு மேற்குலகின் ஆயுத உதவி கிடைத்ததால் உரிமை, விடுதலை என…
-
தேவை சிறிது நிதானம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அவற்றில் முதன்மையானது, இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றுவது. மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், அடையாள அட்டை இல்லாதவர்களைத் தீவிரமாகத் தேடுகிறார்கள். பங்களாதேஷிகள் எல்லை கடந்து இந்தியா வந்து வேலை செய்வது வாடிக்கையாக நடப்பதுதான். அதைத் தடுப்பதற்கென்றே இரு தரப்பிலும் பாதுகாப்புப் படையை வைத்திருக்கிறார்கள். எனினும் நீண்ட நெடிய சிக்கலான எல்லைப் பகுதி என்பதால் ஊடுறுவுவது எளிது. இம்மக்கள் உத்திரப்பிரதேசம், குஜராத், டெல்லி எனப்…
-
மருந்தாகும் மக்கள் சேவை
மக்களுக்குக் குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்களைத் திறந்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் மக்களின் மாதாந்திர செலவில் கணிசமாக மிச்சமாகும். உலகளாவிய மருந்துச் சந்தையில் இந்தியா பதிமூன்று சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இதன் தொடக்கம் 1970ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த காப்புரிமைச் சட்டம். இதன்படி மருந்துப் பொருள்களுக்குக் காப்புரிமை வாங்க முடியாது. அதை உருவாக்கும் செய்முறை மட்டுமே காப்புரிமை விதியின் கீழ் வரும். எனவே செய்முறையில் சிறிய மாறுதலைச் செய்து…
-
குற்றமும் தண்டனையும்
பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஒன்பது குற்றவாளிகள் சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். ஆளும் கட்சியும் முன்னர் ஆண்ட கட்சியும் நீதி நிலைநாட்டப்படத் தாங்களே காரணம் என அறிக்கைப் போர் நடத்துகிறார்கள். இவ்வழக்கை முடக்குவதற்கு நடந்த அத்தனை முயற்சிகளையும் எதிர்கொண்டு புகார் அளித்த பெண்களும், அவர்களுக்குத் துணையாகத் திரண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் பொதுமக்களும் போராடிப் பெற்ற நீதி இது. பத்தொன்பது வயதுப் பெண் ஒருவர், தனக்கு அறிமுகமான ஆண் நண்பர்…
-
எல்லை(யில்லா)த் தொல்லை
இந்திய வரைபடத்தின் தலைப்பகுதி பிராந்தியத்தை நாம் மொத்தமாக காஷ்மீர் என்று அழைக்கிறோம். உண்மையில் அது மூன்றாகப் பிரிந்திருக்கிறது. பக்கவாட்டுக் கோடெடுத்துத் தூக்கிவாரிய தலைப்பகுதி போலிருக்கும் உச்சிப் பகுதியில், இடது பக்கம் இருக்கும் லடாக்கில் ஒரு பகுதியை 1962 முதல் ஆக்கிரமித்து அக்சை சின் என்றழைக்கிறது சீனா. வலது பக்கம் இருக்கும் கில்கிட், அதற்குக்கீழே காது போன்ற தோற்றத்தில் இருக்கும் ஆசாத் காஷ்மீர் இரண்டுமே பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நடுவில் முகம் மாதிரி இருக்கும் பகுதி மட்டுமே ஜம்மு,…
-
கோட்டுக்கு அந்தப் பக்கம்
ஆசாத் காஷ்மீர், பாகிஸ்தான் எல்லையில் இருந்தாலும் அந்நாட்டு அரசியலின் மையப்புள்ளி அதுவே. கில்கிட் பல்டிஸ்தானுக்குக் கீழே, தெற்கிலும் மேற்கிலும் பாகிஸ்தானின் பஞ்சாப்பும், கைபர் பக்துன்வாவும் இருக்க, கிழக்கில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் லைன் ஆஃப் கன்ட்ரோலை ஒட்டியிருக்கும் நிலத்துண்டு ஆசாத் காஷ்மீர் எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர். குத்துமதிப்பாகக் கேரளா மாநிலத்தின் அளவில் மூன்றில் ஒரு பங்கிருக்கும். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த 13000 சதுர கிலோமீட்டருக்குச் சற்றே அதிகமான நிலத்தில் நாற்பது லட்சம்பேருக்கு மேல் வசிக்கிறார்கள். …
-
அறிவிக்கப்படாத தாக்குதல்களும் அறிவிக்கப்பட்ட அபாயங்களும்
பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றே பஹல்காம் படுகொலை குறித்துக் கவலை தெரிவித்தது. கண்டனம் தெரிவித்தது. எனினும் தன் அறிக்கையில், பஹல்காமை சட்டவிரோத ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பகுதியாகக் குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கான பதில் அறிவிப்புகளை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தாகும் அறிவிப்பைக் கடுமையாக நிராகரிக்கிறோம் என்றது பாகிஸ்தான். ஆதாரமின்றித் தங்கள் மீது குற்றஞ்சாட்டக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம் என்றது. சிந்து நதி நீரைத் தடுக்கும் நடவடிக்கைகளை…
-
பஹல்காம் தாக்குதல்: நாம் என்ன செய்ய வேண்டும்?
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புக் கேபினட் கமிட்டி (Cabinet Committee on Security – CCS) விரைவாக முடிவுகளை எடுத்து அறிவித்தது. வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு, பாகிஸ்தான் தன்னுடைய உதவிகளை நிறுத்தும் வரைக்கும் இது…
-
காஷ்மீர்: வாழ்வும் வன்முறையும்
பதினேழு வயது காஷ்மீரி சிறுமியான மும்தாஸாவின் கால் முறிந்திருந்தது. எனினும் சுற்றுலா வந்திருந்த பத்து வயதுச் சிறுவனைக் காப்பாற்ற, அவனை முதுகில் சுமந்து கொண்டு தன்னுடைய மண் குடிசையை நோக்கி ஓடினார். பஹல்காம், பைசரன் மைதானத்தில் இருந்து அவர்கள் வீடு ஒரு கிலோமீட்டர் தூரம்தான். அன்று வழக்கம்போலச் சுற்றுலாப் பயணிகளுடன் வழிகாட்டியாக மைதானத்துக்குச் சென்றிருந்தார். ஏப்ரல் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் மூன்று மணியளவில், மேகி செய்து சாப்பிட்டுவிட்டு இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தனர். வெடிச்சத்தம் கேட்டதும் ஏதோ பட்டாசுச்…
