Category: கட்டுரை
-
நாடும் ஒரு நாட்டியப் பேரொளியும்
கடந்த வாரம் வந்து சென்ற சிவராத்திரிக்குப் பத்து நாள் முன்னும் பின்னுமாக நாம் யாரைக் குறித்து அதிகம் பேசினோம் என்று சிந்தித்துப் பார்த்தால், விடை ஜக்கி வாசுதேவாக இருக்கும். நம்மால் மாற்ற இயலாத, ஏற்கவும் முடியாதவற்றை நகைத்துக் கடக்க இந்நாள்களில் பழகிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நமது நகைப்போ, நிராகரிப்போ நெருங்கவே முடியாத உயரத்தில் அவர் தமது சமஸ்தானத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். எப்படி முடிந்தது? வெறும் பேச்சு. என்ன சொல்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். இதுதான் அவர்களின்…
-
அதானி: மூன்றாம் இடத்தில் இருந்து முட்டுச் சந்துக்கு
புதன்கிழமை இரவு. மும்பை தாஜ் ஹோட்டல். அதானி வழக்கமாகச் செல்லும் வெதர் க்ராப்ட் ஐந்து நட்சத்திர உணவகம். துபாய்த் துறைமுகத் தலைமை அதிகாரியுடன் வேலை தொடர்பான சந்திப்பு இருந்தது அதானிக்கு. இரவு உணவும், அலுவல் சந்திப்பும் முடிந்தவுடன் பணம் செலுத்திவிட்டுக் கிளம்பினார் அதானி. நண்பர்கள் சற்று நேரம் இருக்கலாம் எனச் சொன்னார்கள். அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். கீழே தரைத்தளத்தில் துப்பாக்கிச் சத்தம். 26/11 தீவிரவாதத் தாக்குதல் அது. இரவு உணவுக்குப் பின் தாமதிக்காமல் கீழே சென்றிருந்தால்…
-
கிரிப்டோ ராணியின் மோசடி சாம்ராஜ்யம்
அமெரிக்க எஃப்.பி.ஐ.யின் தேடப்படுபவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருப்பவர் ருஜா இக்னடாவா. இந்தப் பட்டியலில் தற்போது இருக்கும் ஒரே பெண் இவர் மட்டும்தான். இவரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் கிடைக்கும் பரிசுத் தொகை எண்பது லட்சத்துக்கு மேல். அப்படி என்ன செய்தார் ருஜா? நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டாளர்களிடம் இருந்து ஏமாற்றியிருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் முப்பத்தாராயிரம் கோடி ரூபாய். இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப் பெரிய பண மோசடியாக இருக்கக்கூடும் இது. 1980-ல் பல்கோியாவில்…
-
உலகம் முழுதும் நம்மைப் பேசும்
நாற்பத்தி ஆறாவது சென்னை புத்தகக் காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த முறை சர்வதேசப் புத்தகச் சந்தையும் நடந்தது. இதை நடத்தியது தமிழ்நாடு அரசு. வழக்கமாக நடக்கும் புத்தகக்காட்சி, பதிப்பாளர்கள் கொண்டு வரும் புத்தகங்களை மக்கள் கண்டு, தேர்ந்தெடுத்து வாங்குவதற்கானது. தமிழ்நாடு அரசின் இந்த சர்வதேசப் புத்தகச் சந்தை தமிழ் பதிப்பாளர்களும் பன்னாட்டுப் பதிப்பாளர்களும் தங்கள் புத்தகங்களை மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்க விற்க களம் அமைத்துத் தருகிறது. ஒரே இடத்தில்தான் என்றாலும் தனியாக அமைக்கப்பட்டுள்ள இந்த…
-
பொங்குக!
அறுவடை நாள் கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பண்டிகைதான். உலகெங்கிலும் எப்படி எப்போது இந்நாளைக் கொண்டாடுகிறார்கள் எனத் தெரிந்துகொள்வோம். பிப்ரவரி மாதத்தில் திராட்சைப் பழங்களை ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடும் விழாவாக அறுவடையைக் கொண்டாடுகிறது அர்ஜென்டைனா. அழகிப்போட்டியும் உண்டு. வீதி முழக்க மக்கள் குவிந்து திராட்சைப் பழத்தில் குளித்து மகிழும் இந்த விழா ஸ்பெயின் நாட்டிலும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. ஸ்பெயினின் புனோல் நகரத்தில் தக்காளியை வீசிக் கொண்டாடும் ல டொமாட்டினா விழாவும் மிகப்…
-
குடும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம்
(ஜூலை 9, 2023 அன்று ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் வெளியான கட்டுரை) குடும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம் என்கிற பெயரில் கமலஹாசன் முன்வைத்த தேர்தல் வாக்குறுதி, திமுக அரசால், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. யார் பயனாளிகள் என்பதற்கான விதிகளைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்ல, 21 வயது நிரம்பிய திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் அனைவருமே விண்ணப்பிக்கத் தகுதியானவர் என்பது வரவேற்கத்தக்கது.…
