Category: கட்டுரை
-
மொழி அரசியல்
இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளைப் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். பேச்சு வேகத்தில் தெரியாமல் வந்த சொற்கள் அல்ல. ஒருமுறை சொன்னதோடு நிறுத்தாமல் மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார். எதிர்ப்பு எழுந்தபிறகு, தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். மன்னிப்பு கேட்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருந்தது தமிழ்நாடு அரசு என்கிறார் தர்மேந்திர பிரதான். ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசி முடிவெடுக்கலாம் என முன்வருவதே புரிந்துணர்வு ஒப்பந்தம். அதில் கையெழுத்திடுவதால்…
-
ஊதியத்துக்கு ஏற்ற உழைப்பு
மார்ச் பதினெட்டாம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் சம்பள உயர்வு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் எண்ணிக்கை அதிகரிக்க எனச் சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஆசிரியர் சங்கம் விடுமுறைப் போராட்டம் என்று அறிவித்திருந்தது. இம்மாதிரி அரசு ஊழியர்கள் அறிவிக்கும் போராட்டங்கள், பொதுமக்கள் ஆதரவினைப் பெற்றதாக என்றுமே செய்தி வெளியானதில்லை. அரசு மக்களுக்குச் செய்யும் நன்மைகள் அனைத்துமே…
-
உள்ளூர்க்காரனை நம்பாதே! – பாகிஸ்தானில் சீனாவின் அடாவடி
குவாதர் சர்வதேச விமானநிலையத்தின் உரிமையாளர் பாகிஸ்தான். பணம் கொடுத்தது சீனா. பயன்படுத்த யாருமில்லை. கடந்த வாரம் முழுக்க சொல்லிவைத்தாற்போல் எல்லா செய்தித்தளங்களும் பயணிகள் யாருமில்லாத விமான நிலையம் என கேலியான தொனியில் செய்தி வெளியிட்டிருந்தன. மற்றவர்களுக்கு எப்படியோ, இந்தியா அப்படிச் சிரிப்புடன் கடந்துபோக இயலாத சீரியஸ் செய்தி அது. சீன பிஆர்ஐ திட்ட முத்துமாலையில் இணைந்திருக்கும் முக்கியமான முத்து குவாதர். மீனவர் நிறைந்த வணிக நகரம் குவாதர். இந்நகருக்கு பிரிட்டிஷ் இந்தியாவிடம் அலுவல் ரீதியாக முதன்முதலில் உரிமை…
-
வித்தியாசங்களைக் கொண்டாடுவோம்
ஷாரன் சதுரங்க விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். திறமையும் இருக்கிறது. தேசிய அளவில் விளையாடத் தேர்வாகி இருக்கிறார். போட்டிகளுக்கு அவரால் உடனே கிளம்பிவிட முடியாது. முதலில் ஷாரனின் அப்பா கிளம்பிப் போவார். தன் மகளின் சக்கர நாற்காலி உள்ளே வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பார். ஓரிரண்டு படிகள் என்றால்கூடப் பரவாயில்லை. இரண்டு மூன்று மாடிகள் என்றால் மிகவும் சிரமம். போட்டி நடக்கும் பெரிய ஹாலின் கதவு சிறியதாக இல்லை என்பதை உறுதி செய்ய…
-
இமயமலையில் தண்ணீர் இல்லை
ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திடீரென நீர் நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை காஷ்மீர். பத்தாண்டுகளாகவே சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மழையும் பனிப்பொழிவும் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகின்றன. இந்த ஆண்டு குளிர்காலத்தில் எண்பது சதவிகிதம் மழை குறைந்துள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி…
-
காதலும் பூமர்களும்
காதல் உன்மத்தம் கொள்ளவைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது காதல். ஆனால், காதல் உணர்வு அல்ல; பசி தாகம் போன்று உடலியல் உந்துதல் என்கிறார்கள் உயிரியலாளர்கள். சிக்கலான உணர்ச்சி என வரையறை செய்கிறார்கள் உளவியலாளர்கள். மனித மூளையில் காதல் நிகழ்த்தும் விந்தைகள் பற்றிப் பல ஆய்வுகள் நடக்கின்றன. டோபமைன், ஆக்சிடோசின், வேசப்ரோசின், அட்ரினலின், என்டோர்பைன், நோர்பைன்ஃரைன் என ஹார்மோன்களையும் வேதிப் பொருள்களையும் வைத்து மூளையில் ஒரு கொண்டாட்டக்…
-
எட்டுவதற்கியலா சமத்துவம்
சம வாய்ப்பு மறுக்கப்படுவோரைக் கைதூக்கிவிட உதவுவது அரசாங்கத்தின் கடமை. இதைப் புரியவைக்கக் காலந்தோறும் போராட்டங்கள் நடக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவர் தலைமைக்கு வரும்போதோ, நியாயத்தை உணர்ந்து கொள்ளும் தலைமை கிடைக்கும்போதோ, அரசியல் லாபம் கருதியோ இப்போராட்டங்கள் சட்டவடிவம் பெறும். ஜூம் மீட்டிங்கில் இடுப்புக்கு கீழேயும் ஃபார்மல் உடை அணிவது போல, அது அரிதான நிகழ்வு. ஆனால் நெடுங்காலம் போராடி வாங்கிய உரிமையை, சட்டப்பாதுகாப்பை மீறி அழிப்பது மட்டும், பேஸ்புக் நாம் பேசுவதை ஒட்டுக்கேட்டு விளம்பரம் காண்பிப்பது போல அடிக்கடி…
-
பழைய இரும்பு, புதிய இணையதளம்
அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகழ்வாய்வு தொடர்பான பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மெய்நிகர் இணையதளம் மூலம் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட முடியும் என்பதும் ஒன்று. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய தொல்லியலாளரான அலெக்சான்டர் ரெயா, ஆதிச்சநல்லூரில் பெரியளவில் அகழாய்வு செய்தார். இந்நூற்றாண்டில் இந்திய அரசாங்கமும் இந்நிலத்தை அகழ்ந்தது. ஆய்ந்தது. இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகளில் இருந்த பொன்னும்,…
-
அது வேறு வர்க்கம்
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல தங்கள் நாட்டுக்கும் நல்லது எனப் பல நாட்டு மக்கள் நினைக்கின்றனர். முக்கியமாக, பெரும்பான்மை இந்திய மக்களின் கருத்து அதுதானாம். சவுதி அரேபிய, ரஷ்ய நாட்டுப் பிரஜைகளும் இப்படியொரு நம்பிக்கையிலிருக்கிறார்கள் என்கிறது கருத்துக் கணிப்பு. பாம்பு பால் குடிப்பதாகக் கூடத்தான் மக்கள் நம்புகிறார்கள். அதுவல்ல விஷயம். டிரம்ப், அமெரிக்க நாட்டுக்கு மட்டும்தான் அதிபர் என்றாலும் அவர் எடுக்கும் முடிவுகள் உலக நாடுகள்…
-
பொய்களுக்குத் தயாராகுங்கள்
தங்கள் தளத்தில் பதிவிடுபவை உண்மைதானா எனச் சரிபார்ப்பதைக் கைவிடுகிறது மெட்டா. இனிமேல் உண்மையோ பொய்யோ எதை வேண்டுமானாலும் பதிவிட பேஸ்புக், திரெட்ஸ் உள்ளிட்ட தளங்களைத் தாராளமாகத் திறந்துவிடுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்று இதற்குச் சிலர் பெயர் வைத்திருக்கிறார்கள். மெட்டா தலைவர் மார்க் சக்கர்பெர்க் வெளியிட்ட வீடியோ செய்திக் குறிப்பொன்றில் இம்முடிவைப் பற்றி விளக்கமாகப் பேசியுள்ளார். தங்கள் தளங்களில் பதிவிடப்படும் விஷயங்கள் தணிக்கை செய்யப்படுவதும் பேஸ்புக் சிறையில் வைக்கப்படுவதும் இனிமேல் குறையும் என்கிறார் மார்க். ஆனால், உண்மையா எனச்…
